கட்டுவன்
யாழ்நகரின் வடக்கில் பன்னிரண்டு மைல் தொலைவில் தெல்லிப்பழை என்னும் அழகிய கிராமம் உள்ளது.இதனை அண்மிய சிற்றூர் கட்டுவன். இது நீர்வளம்,நிலவளம்,கற்றோர்வளம்,சான்றோர்வளம் எனபல வளங்களை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகுந்த செம்மண் நிலப்பரப்பாகும்.
மேற்கே காங்கேசன்துறை வீதி,கிழக்கே பலாலி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளை கொண்ட பெருநிலப்பரப்பில் மயிலிட்டி,குப்பிளான்,புன்னாலைகட்டுவன்,ஊரெழு,சுன்னாகம்,மல்லாகம் என அயலூர்களை எல்லையாக கெhண்ட ஊராகும்.
இந்தியாவின் ஆதிகுடிகளாகிய குட்டுவர்கள் வாழ்ந்த பிரதேசம் ஆகயால் குட்டுவனூர் என அழைக்கப்பட்டு பின் மருவி கட்டுவன் ஆனது. என்று வரலாறு கூறுகின்றது.
1.அமைவிடம்
யாழ்நகரின் வடக்கில் பன்னிரண்டு மைல் தொலைவில் தெல்லிப்பழை என்னும் அழகிய கிராமம் உள்ளது.இதனை அண்மிய சிற்றூர் கட்டுவன். இது நீர்வளம்,நிலவளம்,கற்றோர்வளம்,சான்றோர்வளம் எனபல வளங்களை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகுந்த செம்மண் நிலப்பரப்பாகும்.
மேற்கே காங்கேசன்துறை வீதி,கிழக்கே பலாலி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளை கொண்ட பெருநிலப்பரப்பில் மயிலிட்டி,குப்பிளான்,புன்னாலைகட்டுவன்,ஊரெழு,சுன்னாகம்,மல்லாகம் என அயலூர்களை எல்லையாக கெhண்ட ஊராகும்.
2.வரலாறு

குட்டுவன் வந்து
ReplyDeleteகட்டுவன் ஆனா
சிவந்த மண் எங்களின்
செந்தூரப் பொட்டாகும்!!!!
அன்று
வயல்கள் விளைந்ததால்
செல்வந்த பூமிகட்டுவன் !!!!
இன்று
வயல்கள் விளையவில்லை
இருந்தும் எம் ஊர்!!!!!!!!
"ஷெல்"(செல்வந்த ) வந்த பூமி!!!!
நானும் கட்டுவனுக்கு போவேன்
ReplyDeleteபழகிய பூமியைப்
பலவருட இடைவெளியில்
பார்க்கக் கிடைக்கிற
படபடப்பான சந்தோஷம்...?
நீர்க்கக் கிடைத்த மோரில்
கறிவேப்பிலை நறுமணமாய்,
ஊர்ப்புறத்து நட்புகளில்
ஊற்றெடுக்கும் அன்பு வெள்ளம...?
எதிர் பார்ப்புகள் எதுவுமின்றி
என்னுடைய முகம்பார்த்து,
இதயத்தைப் பகிர்ந்துகொள்ளும்
இணையில்லா மனநெருக்கம்...?
வேர்க்கின்ற வேளையில்
கிடைக்கிற விசிறிபோல,
பார்க்கின்ற கண்களெல்லாம்
பகிர்ந்துகொள்ளும் பரவசம்...?
யார்பிள்ளை நீயென்று
இயல்பாய்க் கேட்டுவிட்டு,
பேர்கேட்ட பின்னாலே
கைப்பிடிக்கும் கரிசனம்...?
வேற்று நிலத்தில்
விழுதுவிட்ட வாழ்க்கையினைத்
தோற்கடித்துச் சரிக்கிற
உறவுகளின் உற்சாகம்...?
இவையெல்லாம்
எனக்கும் கிடைக்குமென்றால்
இப்போதே சொல்லுங்கள்,
நானும்
கட்டுவனுக்கு ----------------